Sunday 24 April 2016

யார் பொறுப்பு?

அந்த கோயிலுக்கு சற்று தள்ளி ஓரு மரத்தடியில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான் அவன்.

கால் சற்று ஊனம். இறைவன் இப்படி படைத்து விட்டானே? இப்படி கையேந்தவிட்டிவிட்டுவிட்டானே? என்று இறைவன் மீதே கோபம்.

ஒரு நாள் இறந்தும் போகிறான்.

"கடவுள் எனக்கு துரோகம் செயதுவிட்டார்.
கடைசிவரை பிச்சைக்காரனக இருந்து என்காலம் முடிந்துவிட்டது. என் விஷயத்தில் அவருக்கு கருனை இல்லை." என்று புலம்பினான் அவனை அழைத்து சென்ற எமதூதர்களிடம்.

எமதூதர்கள், ''கீழே பார்.'' என்றார்கள்.

இறந்த அவன் உடலை புதைப்பதற்கு, அவன் உட்கார்ந்த இடத்திலயே புதைத்து விடலாம் என முடிவு செய்து சிறிது தோண்டினார்கள்.

சிறிது தோண்டியதும் வைரமும் வைடுரீயமும் கொண்ட புதையல் தென்பட்டது.

''கடவுள் படைத்ததும் அவர் வேலை முடிந்துவிட்டது. பணக்காரனக ஆவதோ ஏழையாக இருப்பதோ அவர் அவர் செயலை பொறுத்தது. எத்தனையோ முறை நடக்கும் போது, அந்தஇடத்தில் சற்று வித்தியாசமான ஓசையை உணர்ந்திருக்கிறாய். ஆனால் தோண்டி பார்க்கவில்லை நீ. புதையல் மீதே உட்கார்ந்து பிச்சை எடுத்தவன் நீ. இதற்கு யார் பொறுப்பு?"

No comments:

Post a Comment