Sunday 24 April 2016

தொந்தரவு

ஒரு  சின்ன பொண்ணு வீட்டுல அதிகமா அடம் பண்ணிகிட்டே இருந்துச்சி..அவங்க அப்பாவ பேப்பர் படிக்க கூட விடாம தொந்தரவு பண்ணிகிட்டே இருந்துச்சி....

அப்பா என்ன பண்றதுன்னு யோசிச்சாரு.

அப்புறம் பேப்பர் ல கடைசி பக்கத்துல World Map படம் இருந்துச்சி. அந்த பக்கத்த சின்ன சின்ன துண்டா கிழிச்சி பொண்ணுகிட்ட குடுத்தாரு.

"இந்த World Map-ஐ சரியா வச்சி காட்டு பாக்கலாம்"-னு சொல்லிட்டாரு..

ஒரு 5 நிமிஷத்துல அந்த குழந்தை சரியாய் அடுக்கி வச்சிடுச்சி...

அப்பா ஆச்சர்யப்பட்டு, "எப்படிமா இவ்ளோ சீக்கிரம் முடிச்ச?-னு கேட்டாரு.

அப்போ அந்த சின்ன பொண்ணு சொன்னுச்சாம், "அப்பா, நீங்க குடுத்த இந்த World Map பின்னாடி ஒரு மனுஷனோட முகம் இருந்துச்சி. நான் மனுஷன சரியாய் வச்சேன். உலகம் தானா சரியா மாறிடுச்சி"

No comments:

Post a Comment