Sunday 24 April 2016

மறுபடியுமா?

டீச்சர்: "ஏண்டா லேட்?"
பையன்: "வீட்ல பிரச்சனை..!"

டீச்சர்: "என்ன பிரச்சனை?"
பையன்: "வீட்ல பாட்டி செத்துட்டாங்க..! எரிக்கிறதா.. புதைக்கிறதான்னு பிரச்சனை..!"

டீச்சர்: "அதில் என்ன பிரச்சனை?"

பையன்: "எரிச்சா பிரச்சனை இல்லை.. புதைச்சா தான் பிரச்சனை..!"

டீச்சர்: "அதில் என்ன பிரச்சனை?"

பையன்: "புதைச்சா அந்த இடத்துல.. புல்லு முளைக்குமா..? முளைக்காதான்னு தான் பிரச்சனை..!"

டீச்சர்: " அதில் என்ன பிரச்சனை?"

பையன்: "புல்லு முளைக்காட்டி பிரச்சனை இல்லை.. முளைச்சா தான் பிரச்சனை."

டீச்சர்: "அதில் என்ன பிரச்சனை?"

பையன்: "முளைச்ச புல்லை மாடு.. திங்குமா.. திங்காதான்னு தான் பிரச்சனை..!"

டீச்சர்: " அதில் என்ன பிரச்சனை?"

பையன்: "முளைச்ச புல்லை.. மாடு
திங்கலைன்னா பிரச்சனை இல்லை.. தின்னா தான் பிரச்சனை..!"

டீச்சர்: "அதில் என்ன பிரச்சனை?"

பையன்: "அந்த இடத்துல முளைச்ச புல்லை தின்ன மாடு.. பிழைக்குமா.. பிழைக்காதான்னு தான் பிரச்சனை..!"
.
டீச்சர்: "அதில் என்ன பிரச்சனை?"

பையன்: "மாடு பிழைச்சுட்டா பிரச்சனை இல்லை.. மாடு செத்துட்டா தான் பிரச்சனை..!"

டீச்சர்: "அதில் என்ன பிரச்சனை?"

பையன்: "வேறு என்ன..?? எரிக்கிறதா.. புதைக்கிறதான்னு தான்..!!!!"

டீச்சர்;- "மறுபடியுமா...???????"

No comments:

Post a Comment