Sunday 24 April 2016

ஆப்பிள்

ஒரு அழகான சிறுமி, தன் கைகளில் இரண்டு ஆப்பிள்களை வைத்திருந்தாள்.

அங்கு வந்த அவளின் தாய், "நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கிறாய்.. ஒன்று எனக்கு கொடு.!." என்றாள்.

தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி, பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.

அடுத்ததாக இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்.

தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்.

உடனே அந்த சிறுமி, தாயிடம் சொன்னாள், "அம்மா! இந்த ஆப்பிள்தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க." என்றாள்.

நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.,.

எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்.,.
அறிவு விஸ்தீரமாகவும் இருக்கலாம்.,.

ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்...

அடுத்தவருக்கு போதுமான அளவு இடைவெளி கொடுத்து, அவரை அறியவும்...

நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்...

எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்...

மனக்கணக்கு தவறலாம், மனிதரை பற்றிய கணக்கு தவறக்கூடாது.!!.

No comments:

Post a Comment